உடல்நலக்குறைவு காரணமாக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப். 25) சென்னையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது, ரசிகர்கள் பலரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ரசிகர் ஒருவரின் காலணி கீழே விழுந்தது.