தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என்னுடைய ஸ்கிரீன் சேவர் உங்க புகைப்படம்தான்’ - மணிரத்னம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் - மணிரத்னம் பிறந்தநாள்

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் புகைப்படம்தான் தன்னுடைய செல்போன் ஸ்கிரீன் சேவர் எனப் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர்
மணிரத்னம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளர்

By

Published : Jun 2, 2021, 9:55 AM IST

Updated : Jun 2, 2021, 12:46 PM IST

இயக்குநர் மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றும் என் செல்போன், ஐபாட், டெஸ்க்டாப் என அனைத்திலும் உங்கள் புகைப்படம்தான் ஸ்கிரீன் சேவர்.

இத்தனை வருடங்களாகியும், இத்தனை படங்களாகியும் உங்கள் மீதான பிரமிப்பு குறையவே இல்லை. உங்களால் ஆன பாதிப்பு மாறவேயில்லை. இன்னும் பல ஆண்டுகள் பல படங்கள் நிகழ இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சோனியா அகர்வால்

Last Updated : Jun 2, 2021, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details