தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

10 நாள்களில் முடியப்போகும் 'மாஸ்டர்' ஷூட்டிங் - கொண்டாட்டத்திற்குத் தயாராகும் விஜய் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இன்னும் பத்து நாள்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Feb 19, 2020, 7:37 AM IST

பத்து நாட்களில் முடிவுயடையும் மாஸ்டர் பட ஷூட்டிங்
பத்து நாட்களில் முடிவுயடையும் மாஸ்டர் பட ஷூட்டிங்

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது, கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் பிகில் படத்தால் விஜய்யின் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் சற்று தாமாதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இன்னும் பத்து நாள்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தற்போதே, தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:என்னுடைய பயோபிக் திரையுலகில் எடுபடாது - தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு

ABOUT THE AUTHOR

...view details