சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினரால் தொடங்கப்பட்டு ஏழை மக்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டு வரும் #விலையில்லாவிருந்தகம் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் #விலையில்லாவிருந்தகம் என்ற பெயரில் இலவச உணவகம் தொடங்கினர். நாள்தோறும் ஏழை எளிய மக்கள், நலிந்தோர் என்று 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, கடலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்களால் இந்த உணவகம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த உணவகம் தொடங்கி இன்றுடன் (ஆகஸ்ட் 28) 50 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக #விலையில்லாவிருந்தகம் என்ற ஹேஷ்டாக்கை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினர். அத்துடன் இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் பதிவேற்றினர்.
#விலையில்லாவிருந்தகம் - காலை உணவு அருந்தும் உண்ணும் பொதுமக்கள் இதையடுத்து விஜய் ரசிகர்களின் #விலையில்லாவிருந்தகம் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. அத்துடன் விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துவரும் இணையவாசிகள், #விலையில்லாவிருந்தகம் தொடர்பான தகவல்களை ஷேர் செய்தும் வருகின்றனர்.