தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கம் போட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட உள்ளதாக அம்மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

vijay-makkal-iyakkam-in-urban-civic-bodies
vijay-makkal-iyakkam-in-urban-civic-bodies

By

Published : Jan 27, 2022, 1:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் களமிறங்கி போட்டியிட்ட மொத்த இடங்களில் 80 விழுக்காடுக்கும் மேல் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்து வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட உள்ளதாக மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் புகைப்படம் மற்றும் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.

இதையும் பட்ங்க : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 24 மணி நேரமும் கண்காணிக்க 45 பறக்கும் படை

ABOUT THE AUTHOR

...view details