விஜய்குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் உறியடி-2. இப்படத்தை நடிகர் சூர்யா 2டி என்டர்டெயின்ட்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அரசியல், காதல், சாதி என தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை பற்றி பேசக்கூடிய படமாக உருவாகியுள்ளது.
பயங்கர எதிர்பார்ப்புடன் 'உறியடி-2' ஏப்ரல்-5ஆம் தேதி ரிலீஸ்! - suriya
'உறியடி-2' ஏப்ரல்-5ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சாதியை முன் வைத்து ஒருவன் அரசியலில் முன்னேறுவதற்காக செய்யும் சதி திட்டங்களை தோலுறித்து காட்டிய படம் உறியடி. 2016இல் வெளிவந்த இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே பாணியில் உறியடி-2 படத்தை விஜய்குமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த டீசரில் இளைஞர்கள் அரசியல் களம் காண வேண்டும் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது உறியடி-2 படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதால் உறியடி-2 ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வருகின்ற ஏப்ரல்-5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.