சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது.
அதுமட்டுமின்றி, கரோனா அச்சம் காரணமாக நீண்ட மாதங்களாக திரையரங்குகளில் பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 'மாஸ்டர்' வெளியாகி திரையரங்குகளை மீட்டது.
'மாஸ்டர்' திரைப்படம் குறித்தான அறிவிப்புகள் வெளியான நாள் முதல் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது, இந்நிலையில் இப்படம் உலகளவில் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
உலகளவில் 2021ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் 45ஆவது இடத்தை 'மாஸ்டர்' படம் பெற்றுள்ளது. மேலும் முதல் 50 இடங்களுக்குள் உள்ள இந்திய படமும் 'மாஸ்டர்'தான். இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்போ 'சூரரைப் போற்று'...இப்போ 'மாஸ்டர்': ஐஎம்டிபியில் சாதனை படைக்கும் தமிழ் படங்கள்