தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2020, 5:45 PM IST

ETV Bharat / sitara

மாஸ்டர் தெலுங்கு டீசர் நாளை வெளியீடு!

விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படத்தின் தெலுங்கு டீசர் நாளை (டிசம்பர் 17) வெளியாகிறது.

master
master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதமே திரைக்கு வரவேண்டிய படம் கரோனா பிரச்னை காரணமாக வெளியீட்டில் தாமதமானது.

முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் "குட்டி ஸ்டோரி", "வாத்தி கம்மிங்" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே படத்தின் டீசர் சமூகவலைதளத்தில் ட்ரெண்டானது.

தெலுங்கு மாஸ்டர் பட போஸ்டர்

தற்போது 'மாஸ்டர்' படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துதான் மொத்த திரையுலகமும் உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை (டிசம்பர் 17) வெளியாக உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #MasterTeluguTeaser என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details