தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2020, 7:48 PM IST

Updated : Nov 14, 2020, 7:55 PM IST

ETV Bharat / sitara

வெளியான சிலமணி நேரத்தில் புதிய சாதனைப் படைத்த 'மாஸ்டர்' டீசர்!

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசரை வெளியான சிறிது நேரத்தில் 6.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

master
master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் "குட்டி ஸ்டோரி", "வாத்தி கம்மிங்" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் இன்று (நவ. 14) வெளியிடப்பட்டுள்ளது.

எப்பொழுதும்போல இந்த டீசரிலும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்யின் காட்சியை #Vaathi, #MasterTeaser என்ற ஹாஷ்டேக்கினைக் கொண்டு சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், டீசர் வெளியாகி 90 நிமிடங்களில் இதுவரை 6.1 மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுள்ளனர். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Last Updated : Nov 14, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details