சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதன் காரணமாக இந்த படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில் இந்த மாதம் வெளியாகும் திரைப்படங்கள், சீரியஸ் குறித்தான விளம்பர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 'மாஸ்டர்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமேசான் ப்ரைமின் 'மாஸ்டர்' ட்வீட்: அப்போ அங்க ரிலீசாயிருந்தா... இப்போ இங்க ரிலீஸ் ஆயிருக்கும்! - மாஸ்டர் பாடல்கள்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் அமேசன் ப்ரைமில் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீசாகி ஆகியிருந்தால், ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதம் வந்திருக்கும். அந்த வகையில்அமேசான் ப்ரைம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி 'மாஸ்டர்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த விளம்பரம்தான் இது என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வருகின்றனர்.
'மாஸ்டர்' படத்தின் ஃபைனல் அவுட் இன்னும் ரெடியாகவில்லை எனவும் தியேட்டர் ரிலீஸ், ஆன்லைன் வெளியீடு குறித்து எந்த முடிவுகளும் உறுதி செய்யப்படவில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.