லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்' மாஸ்டர்'. கரோனா காரணமாக வெளியீடு தாமதமான நிலையில், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. கரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளே அனுமதிக்கப்பட்டன.
வெளியானது "வாத்தி கம்மிங்" வீடியோ சாங்! - விஜய்யின் மாஸ்டர்
விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' வீடியோ சாங் வெளியானது.
ஆனாலும் படம் தொடர்ந்து நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியா கடந்து உலக அளவில் வசூலில் சக்கைப்போடு போடுவதாக தயாரிப்பாளரே தெரிவித்துள்ளார். இதனிடையே, மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது இப்படத்தின் பாடலான 'வாத்தி கம்மிங்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே இப்பாடலை அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் #VaathiComing என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். சில நாள்களுக்கு முன் வெளியான 'குட்டி ஸ்டோரி' வீடியோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றது.