தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இது இன்னும் முடியல...இனிமேதான் ஆரம்பமே: 'பீஸ்ட்' இரண்டாவது லுக்! - தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்

விஜய்யின் 65ஆவது படமாக உருவாகிவரும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Beast
Beast

By

Published : Jun 21, 2021, 8:42 PM IST

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. புல்லட், டார்கெட், வெறித்தனம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக படத்தின் பெயரை கணிக்க, யாருக்கும் கணிக்காத விதமாக ‘பீஸ்ட்’ என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நாளை (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளை விஜய் கொண்டாடவுள்ள நிலையில், இன்று (ஜூன்.21) பீஸ்ட் படக்குழுவினர், x - men சீரிஸில் வரும் வுல்வரின் (லோகன்) போல வெள்ளை வெஸ்டில் விஜய் கையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் வகை துப்பாக்கியை வைத்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளத்தில் வைரலானது.

தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது லுக், விஜய்யின் பிறந்தநாளான ஜூன்.22 நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'கில்லி', 'தலைவா', 'தெறி', 'சர்கார்', 'மெர்சல்', 'பிகில்', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் விஜய்யின் அதிரடி காட்சிகளை மாஸ்-அப் செய்து வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதியின் பீஸ்ட்: என்ன சொல்கிறது ஃபர்ஸ்ட் லுக்?

ABOUT THE AUTHOR

...view details