ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு நடிகர் விஜய் தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் என்பதால் அவ்வாறு உணவளிக்க இயலவில்லை. எனவே சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழாவுக்கான விருந்தளிப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தமுறை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்தளித்து பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆட்டோக்காரர்களின் தோழன் விஜய்! - விஜய்
உழைப்பாளர்கள் தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்தளிக்க முடியாததால், சமீபத்தில் விருந்தளித்து பரிசு வழங்கியுள்ளார் விஜய்.
vijay
விஜய் படப்பிடிப்பில் இருந்ததால், இவ்விழாவை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் தலைமையேற்று நடத்தினார். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள், மதிய உணவை வழங்கினார். இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
Last Updated : May 26, 2019, 4:46 PM IST