'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'பீஸ்ட்'.
நெல்சன் இயக்கிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கெனவே படத்தின் மூன்று கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வந்தது.