தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இருவர் இணைந்தால் தமிழர்களுக்கு நல்ல காலம்  - எஸ்.ஏ.சி ஆருடம் - vijay father Chandrasekar speech at kamal 60 function

’உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறினார்.

vijay father Chandrasekar speech at ungal nan function

By

Published : Nov 18, 2019, 8:43 AM IST

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘உங்கள் நான்’ என்ற விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் கமல் குறித்து பேசுகையில்,

’உங்கள் நான்’ விழாவில் கமல் - ரஜினி

”சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது போன்ற விமர்சனங்கள் சில காலமாக எழுந்துவருகின்றன. எல்லாத் துறையினரும் அரசியலுக்கு வரலாம். சினிமா துறையினர் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாதா என்ன? நிச்சயமாக கமல் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்” என்றார்.

இதையும் படிங்க: நான் ஏன் வெட்கப்பட வேண்டும்; இந்த சமூகம் தான் வெட்கப்படவேண்டும் - 'சிங்கபெண்' லக்ஷ்மி அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details