'பிகில்' திரைப்படத்தை முன்னிட்டு கட்வுட், பேனர், ஃப்ளக்ஸ் வைப்பதற்குப் பதிலாக சிசிடிவி கேமராக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்திக் கொடுத்துள்ளனர்.
நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி விஜய் நற்பணி இயக்கத்தினர் பேனர் கலசாரத்தை தவிர்த்து நான்கு இடங்களில் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.