ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்பட்ட விஜய் மெர்சல் படத்தின் மூலம் தளபதி என அன்போடு அழைக்கப்படுகிறார். அதேபோன்று அவரது ரசிகர்கள் விஜய் பிறந்தநாள், திரைப்படம் வெளியாகும் நாளில் ரத்ததானம், புதுவிதமான சேவையை தொடங்கிவைப்பார்கள்.
அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விலையில்லா உணவகம் என்ற திட்டத்தை தொடங்கி நாள்தோறும் காலையில் இலவசமாக உணவு வழங்கிவருகின்றனர். இந்தத் திட்டம் இதுவரை எட்டு மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 2021ஆம் ஆண்டை முன்னிட்டு விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் புதிதாக விலையில்லா உணவகத்தை திறந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் தளபதி விலையில்லா உணவகம் திறந்துவைக்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் காஞ்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.கே. தென்னரசு ஏற்பாட்டின்பேரில் இந்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு விலையில்லா உணவளிக்கும் விஜய் ரசிகர்கள் திறப்பு விழாவில் மாவட்டக் குழு உறுப்பினர் பரணி சேட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காலையில் 7 மணி முதல் 9 மணி வரை விலையில்லா உணவகம் செயல்படும். இந்த உணவகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:'திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' - நடிகை குஷ்பூ