தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நல்லமலை வனப்பகுதி. இந்தப் பகுதியில் யுரேனியம் தனிமம் அதிகளவில் இருப்பதால், யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வன ஆலோசனைக் குழு, அணுசக்தி துறைக்கு இந்த பகுதியில் யுரேனிய சுரங்கம் அமைக்க அனுமதி அளித்துள்ளது.
நல்லமலை வனத்தை பாதுகாப்போம் - பவன் கல்யாணுடன் கைகோர்த்த விஜய் - நல்லமலா
நல்லமலை வனத்தில் யுரேனிய சுரங்கம் அமைப்பதற்கு எதிராக விஜய் தேவரகொண்டா குரல் எழுப்பியுள்ளார்.
யுரேனியம் மிகவும் ஆபத்தான தனிமம், இதனால் வனப்பகுதி அழிவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த திங்கள் அன்று காங்கிரஸ் தலைவர் வி.ஹனுமந்தா ராவ் உடன் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் இதில் இணைந்துகொண்டார். இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நல்லமலை வனத்தை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்ல காற்றும், குடிநீரும் இல்லாமல் யுரேனியத்தையும் மின்சாரத்தையும் வைத்து என்ன செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.