'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. பின் 'கீதா கோவிந்தம்' படம் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் நாயகனாகவும் வர ஆரம்பித்தார். இதன் பின் 'டாக்ஸிவாலா', 'டியர் காம்ரேட்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' (World Famous Lover) என்னும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கிங் ஆஃப் தி ஹில்' மூலம் 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha)' என்னும் முதல் படத்தை வெளியிட்டார். விஜய் தேவரகொண்டா நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பளராகவும் வலம் வருகிறார்.
புதிய வீட்டில் குடும்பத்தினருடன் 'ரவுடி பாய்' விஜய் தேவரகொண்டா! - விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர்
குடும்பத்தினருடன் விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
vijay deverakonda
தற்போது இவர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்பிலி ஹில்ஸ் பகுதியில் புதிய மிகப்பெரிய வீடு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். வீட்டின் கிரஹபிரவேசத்தின் போது தனது அம்மா அப்பா சகோதருடன் விஜய் தேவரகொண்ட எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.