'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தில் 'இங்கெ இங்கெ இங்கெ காவலி' பாட்டின் மூலம் இவருக்கு அதிக ரசிகைகள் கிடைக்க ஆரம்பித்தனர். 'நோட்டா' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நிற்க ஆரம்பித்தார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. சமீபத்தில் வெளியான 'டியர் காம்ரேட்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
இப்படி இளைஞர்களை கவரும் விதத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.