தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஹீரோ' விஜய் உடன் இணையும் ரஜினி பட நடிகை!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ எனும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

ஹீரோ திரைப்பட பூஜை

By

Published : May 19, 2019, 8:19 PM IST

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் விஜய் தேவர கொண்டா. வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவர், 'நோட்டா' என்ற நேரடித் தமிழ் படத்தில் நடித்ததுடன், சொந்த குரலில் டப்பிங் பேசியும் அசத்தினார்.

இதையடுத்து, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. 'ஹீரோ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார்.

'ஹீரோ' திரைப்படம் மியூசிக்கல் த்ரில்லர் மற்றும் ஸ்போர்ட் டிராமா ஆகிய ஜானர்கள் கலந்த பாணியில் உருவாகிறது. படத்தில் விஜய் தேவரகொண்ட பைக்கராக தோன்ற உள்ளாராம். இப்படத்தை, தமிழில் சூப்பர் ஹிட்டான 'காக்கா முட்டை' படத்துக்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிட படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details