டோலிவுட்டின் சாக்லேட் பாயான விஜய் தேவரகொண்டா `அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர், அவருடைய அடுத்த தெலுங்குப் படமான 'கீத கோவிந்தம்' தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
‘டியர் காம்ரேட்’ வெளியாகும் தேதி அறிவிப்பு! - டியர் காம்ரேட்
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் வெளியீட்டு தேதி பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
File pic
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ‘டியர் காம்ரேட்’ என்ற புதிய படத்தில் நடித்துவந்தார். இப்படத்தை நான்கு மொழிகளில் வெளியிட இருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பரத்கம்மா இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தை ஜுன் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.