விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டியர் காம்ரேட்' படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'. கிராந்தி மாதவ் இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த தமிழ் டீஸரில் விஜய் தேவரகொண்டா நான்கு நாயகிகளை காதலிப்பதும், அவர்களிடம் மிக நெருக்கமான உறவில் இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. இதில், பைலட், சுரங்கத் தொழிலாளி, கோபக்கார இளைஞர் உள்ளிட்ட கேரக்டர்களில் தோன்றுகிறார் விஜய் தேவரகொண்டா. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத் தலைவி கேரக்டரில் நடித்துள்ளார்.