'டியர் காம்ரேட்' படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'. கிராந்தி மாதவ் இயக்கும் ,இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், அசத்தலாக படத்தின் டைட்டிலை வெளியிட்டது மட்டுமின்றி நான்கு கதாநாயகிகள் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் இப்படத்திற்கான வெயிட்டிங் மோட் ரசிகர்களை மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.
#WFLFirstLook முரட்டு தேவதாஸாக மாறிய விஜய் தேவரகொண்டா! - இணையத்தில் வைரல்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'வேர்ல்ட ஃபேமஸ் லவ்வர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நான்கு கதாநாயகிகளுடன் குஷி மோடில் விஜய் தேவரகொண்டா இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, காதல் தோல்வியால் தாடி வளர்க்கும் தேவதாஸ் லுக்கில் ரண கொடூரமாக இருக்கிறார். வெள்ளை சட்டை கொப்பளிக்கும் கோபம் வாயில் இருந்து சிகரெட்டின் புகை, முகத்தில் வடியும் ரத்தம் என மரண மாஸ் காட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், அடுத்த லெவலில் முழுசா அர்ஜூன் ரெட்டியா மாறிவிட்ட விஜய் தேவரகொண்டா எனக் கூறி வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் மூலம் வேர்ல்ட் ஃபேமஸ் திரைப்படம் மற்றொரு தேவதாஸ் படமாக இருக்கும் என்ற கணிப்பு அதிகரித்துள்ளது.