தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#WorldFamousLover : 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டாவுக்கு இத்தனை நாயகிகளா...! - World Famous Lover

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Devarakonda

By

Published : Sep 17, 2019, 8:47 PM IST

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. பின் கீதா கோவிந்தம் படம் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் நாயகனாகவும் வர ஆரம்பித்தார். இதன் பின் டாக்ஸிவாலா, டியர் காம்ரேட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதிய படத்திற்கு வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் (World Famous Lover) என்று தலைப்பை வைத்துள்ளனர்.

இப்பபடத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் கிராந்தி மாதவ் இயக்குகிறார்.

கிரியேட்டிவ் கமர்ஷியல் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details