விஜய் தேவரகொண்டா நடிகராக மட்டுமில்லாது தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 'கிங் ஆஃப் தி ஹில்' எனப் பெயரிட்டு முதல் படமான 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha)' என்ற தலைப்பில் தயாரிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் ஷாமீர் சுல்தான் இயக்குகிறார். மதன் குணாதேவா ஒளிப்பதிவு செய்கிறார்.
'மீக்கு மாத்ரமே செப்தா' - வாணி போஜன் பட டீசர் வெளியீடு! - வாணி போஜன்
நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகிவரும் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
Vijay Deverakonda
இப்படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் வாணி போஜன், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படம் குறித்த தகவலை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா இன்று இப்படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் ஹீரோவாக இயக்குநர் தருண் நடிக்கிறார். இவர் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கியவர் என்பது கூடுதல் தகவல்.