தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இன்ஸ்டாகிராமில் சாதனை படைக்கும் விஜய் தேவரகொண்டா - விஜய் தேவரகொண்டா

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

By

Published : Dec 24, 2020, 2:20 PM IST

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படம் மூலம் இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடா உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ரசிகர்களால் செல்லமாக ரவுடி என்று அழைக்கப்படும் இவரை சமூக வலைதளங்களில் பலரும் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திருவிழாபோல் கொண்டாடிவருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா பக்கம்

விஜய் தேவரகொண்டா தற்போது, பூரி ஜெகன்நாத் இயக்கும் ‘பைட்டர்’ படத்தில் நடித்துவருகிறார். விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details