தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷூட்டிங் ஓவர்: 'பிகில் மைக்கேல்' கொடுத்த அன்பு பரிசு!

'பிகில்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijay

By

Published : Aug 14, 2019, 9:53 AM IST

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 'சிங்கப்பெண்ணே' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் தங்க மோதிரம்

இதனையடுத்து, படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு 'பிகில்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக விஜய் வழங்கினார். அப்புகைப்படம் தற்போது சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details