விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து திரைப்படத்தின் போஸ்ட் தயாரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
பீஸ்ட் புரோமோ பாடலின் படப்பிடிப்பில் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்த புரோமோ பாடல், புத்தாண்டு தினத்தில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே விஜய் மக்கள் சேவையில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது பேரிடர் காலங்களில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.