தெறி, மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தில், நயன்தாரா, யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸான வரவேற்பை பெற்றது. இதில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் விஜய் நடிப்பது போல் தெரிகிறது.
இணையத்தில் கசிந்த 'பிகில்' படப்பிடிப்பு புகைப்படம்! - photto viral
'பிகில்' படப்பிடிப்பில் விஜய் கலந்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிகில்
'பிகில்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்எஸ்என் கல்லூரியில் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அப்போது நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வலைதளத்தில் லீக்காகியுள்ளது. எஸ்எஸ்என் கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெறுவதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் விஜய்யை பார்க்க ஆர்வத்துடன் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jul 13, 2019, 4:48 PM IST