தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழாவில் விஜய் ஆண்டனி! - child labour eradication day

தமிழ்நாடு மாநில தொழிலாளர் துறை சார்பாக கொண்டாடப்பட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழாவில் விஜய் ஆண்டனி பங்கேற்றார்.

vijay antony

By

Published : Jun 12, 2019, 7:42 PM IST

தமிழ்நாடு மாநில தொழிலாளர் துறை சார்பாக இன்று (ஜூன் 12) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோஃபர் கபில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, முன்னாள் பெஃப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெஃப்ஸி சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழாவில் விஜய் ஆண்டனி

இதில் பேசிய விஜய் ஆண்டனி, “எந்தக் குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்லக்கூடாது. நல்லா படிக்கணும், சந்தோஷமா வாழணும். குழந்தைகள் கையில் தான்வருங்கால இந்தியா உள்ளது. அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை வரவேண்டும்” என்றார்.

குழந்தைகளுடன் விஜய் ஆண்டனி

பின்னர் மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ஏர்போர்ட் வரை விஜய் ஆண்டனி பயணித்தார்.

ABOUT THE AUTHOR

...view details