இயக்குநர் விஜய் மில்டன் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர்கள் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இது குறித்து அல்லு சிரிஷ் கூறுகையில், ’இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒரு அப்பாவி கிராமத்து மனிதன். ஊர் மெச்சும் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவனாக நடிக்க உள்ளேன். இதற்கு மேல் சொன்னால் நான் படம் பற்றிய தகவல்களை உளறிவிடுவேன்’ என்றார்.
படம் குறித்து தயாரிப்பாளர் கமல் போரா கூறுகையில், ”விஜய் ஆண்டனியும் அல்லு சிரிஷூம் இணைந்திருப்பது படத்திற்கு வலு கூட்டியுள்ளது. அல்லு சிரிஷ் கதாபாத்திரம் ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு பாத்திரமாக இப்படத்தில் இருக்கும்.
தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் அவருடைய சினிமா படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இதுவரை இல்லாத பெயரை அல்லு சிரிஷூக்கு பெற்றுத்தரும். இப்படத்தின் pre-production பணிகள் தற்போது நடந்துவருகின்றன. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது’ என்றார்.
இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.