இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், சீதா, சத்யன், மயில்சாமி, ஜான் விஜய், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன். த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு தலைக் காதலுக்காக 'கொலைகாரன்' ஆன விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால்
விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்துள்ள 'கொலைகாரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
poster
ஒருதலை பட்சமாக காதலிக்கும் தனது காதலிக்காக, அடுக்கடுக்காக பல கொலைகளைச் செய்கிறார் விஜய் ஆண்டனி. கொலைகாரனைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக ஆகஷன் கிங் அர்ஜூன் மிடுக்காக நடித்துள்ளார்.
தியா மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.