தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யுடன் 5ஆவது முறையாகக் கூட்டணி போட்ட நகைச்சுவை நடிகர் - latest kollywood movies

சென்னை: விஜய்யின் 65ஆவது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாகத் தெரிகிறது.

விஜய்
விஜய்

By

Published : Jun 7, 2021, 8:23 AM IST

'மாஸ்டர்’ படத்தையடுத்து நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65ஆவது படத்தில் நடித்துவருகிறார். 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படம் ஜார்ஜியாவில் நடைபெற்றுவந்தது.

தற்காலிகமாக 'தளபதி 65' என்று அழைக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தெரியவந்துள்ளது. அதன்படி தளபதி 65 படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். இதை அவரே ட்விட்டரில் தனது ரசிகரிடம் கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு

மேலும் விஜய்யும், யோகி பாபுவும் இணைந்து இதுவரை ’வேலாயுதம்’, ‘பிகில்’, ‘சர்கார்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details