தமிழ்நாடு

tamil nadu

விஜயின் அடுத்த படத் தலைப்பு லீக் ஆனதா?

By

Published : Dec 10, 2020, 12:57 PM IST

நடிகர் விஜயின் அடுத்த படத் தலைப்பு 'டார்கெட் ராஜா' என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

vijay
vijay

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த மார்ச் மாதமே வெளிவர வேண்டிய படம் கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் பொங்கல் தினத்தன்று 'மாஸ்டர்' படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜயின் அடுத்த படத்தை 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களை இயக்கிய நெல்சன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அனிருத் இசை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இதன் தலைப்பு 'டார்கெட் ராஜா' என வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

டார்கெட் ராஜா போஸ்டர்

இது தொடர்பான போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'டார்கெட் ராஜா' என்றும் இயக்குநர் நெல்சன் இசை அமைப்பாளர் அனிருத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களுக்கு அப்டேட் ஒன்று காத்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட் 'விஜய் 65' படம் குறித்து இருக்கும் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details