இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் படம் 'பிகில்' இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து தீபாவளிக்கு வெளிவருகின்றது.
இதனையடுத்து, மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2020 இல் வெளியாகும் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தை ஃபிலோமின் ராஜ் எடிட் செய்ய ஸ்டன்ட் சில்வா சண்டை இயக்குநராக பணிப்புரிய உள்ளார்.
விரைவில் இப்படத்தின் கதாநாயகி, ஒளிப்பதிவாளர், மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.