தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி! - விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி

கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijaj antony and vijay miltons new movie name revealed
vijaj antony and vijay miltons new movie name revealed

By

Published : Aug 11, 2021, 7:45 PM IST

சென்னை:விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கோடியில் ஒருவன், தமிழரசன், காக்கி ஆகிய படங்கள் வெளியாக வெயிட்டிங்கில் உள்ளன. மேலும், பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்கிறார்.

மழை பிடிக்காத மனிதன்
இந்நிலையில் கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், நாளை இதன் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details