தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாழ்க்கை மட்டுமல்ல காதலும்தான்... விக்னேஷ் சிவனின் நானும் ரெளடிதான் ஷேரிங்ஸ் - ஆர்ஜே பாலாஜி

வாழ்கை தொடங்கியது இங்கே தான். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி, என் தங்கமே நயன்தாரா, கிங் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து 'நானும் ரெளடிதான்' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருப்பதை நினைவுபடுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படம்

By

Published : Oct 22, 2019, 2:26 AM IST

Updated : Oct 22, 2019, 9:33 AM IST

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'நானும் ரெளடிதான்' படம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 21) நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது.

கேங்காக காமெடி, கொஞ்சம் காதல், காமெடி கலந்த ஆக்‌ஷன் வெரைட்டியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் 'நானும் ரெளடிதான்'. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். ராக்ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் பட்டையைக் கிளப்பின.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஒண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் படத்தை தயாரித்திருந்தார்.

காது கேளாத காது என்கிற காதம்பரியாக நயன்தாராவும், பாண்டிச்சேரி பாண்டியாக விஜய் சேதுபதியும் படம் முழுவதும் நண்பர்களோடு அடிக்கும் லூட்டி, நட்பு, காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தப் படத்தில் நயன்தாரா உருகிக் காதலிக்கும் விஜய் சேதுபதி, அவருக்காக பல்வேறு விஷயங்களை துணிச்சலாக செய்வதுதான் படத்தின் கதை. இப்படி இருந்தாலும் நிஜத்தில், நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு காதல் பற்றிக்கொண்டது ஹாட்டாப்பிக்காக பேசப்பட்டது.

இந்தப் படத்தின் ஷுட்டிங்கின்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு நெருக்கமாகி பின் காதலாக மாறி இப்படம் போல் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனிடையே தனது வாழ்கையின் ஸ்பெஷல் படமாக அமைந்த 'நானும் ரெளடிதான்' படம் நான்காவது ஆண்டு நிறைவடைந்துள்ளதை ட்விட்டரில் நினைவுப்படுத்தியுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், வாழ்க்கை தொடங்கியது இங்கேதான். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி, என் தங்கமே நயன்தாரா, கிங் அனிருத், பாசமுள்ள நண்பர்களான ஜார்ஜ் வில்லியம்ஸ், ஆர்ஜே பாலாஜி, நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், தயாரிப்பாளர் தனுஷ், லைக்கா புரொடக்‌ஷன்ஸ் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற பலருக்கு நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோரும் நானும் ரெளடிதான் நான்காவது ஆண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு #4yearsOfNRD என்ற ஹேஷ்டாக்கில் ட்வீட் செய்துள்ளனர்.

வெறும் காதல் கதையாக இல்லாமல், பார்த்திபனின் வில்லத்தனம், பழிக்குப் பழி, ராதிகா, ஆர்ஜே பாலாஜி குழுவினர், மொட்டை ராஜேந்திரன் குறும்புகள் என ரொமாண்டிக் பிளாக் காமெடி திரைப்படமாக 'நானும் ரெளடிதான்' ரசிகர்களை என்டர்டெயின் செய்தது.

Last Updated : Oct 22, 2019, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details