இயக்குநர் பா. ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை', ஜூலை 21ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் டான்ஸிங் ரோஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.