சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரைப் புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதையடுத்து நடிகர் விஜய்யை அந்தப் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் அவர் புகழ்ந்துள்ளார்.
அதில், அழகந்தான் அவந்தான், அழகா, அளவா, அவன் சிரிச்சானே, அட அழகந்தானே என்ற வரிகளில் முதல் முறையாக நடிகர் விஜய்க்கு பாடல் எழுதியுள்ளேன். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளருக்கு நன்றிகள்.
உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்களுக்காக இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த அன்பு முத்தத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், என் ஹீரோ மீது எப்போதும் எனக்குத் தீராத காதல். இனிமை, விவேகம், நகைச்சுவை, அழகு, திறமை, நேர்மை, பணிவு என அனைத்தும் கலந்த விஜய் சேதுபதியுடன் காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தை எதிர்நோக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் ரொமாண்டிக் படத்தை இயக்கிவருகிறார் விக்னேஷ் சிவன்.
இதையும் படிங்க: 'கில்தெம் வித் யுவர் சக்சஸ்'- மாஸ்டர் விஜய்!