தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’வயிறு எரிகிறது...’ - தல, தளபதி சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன்! - தல தளபதி சந்திப்பு

இயக்குநர் நெல்சன் தல தோனி, தளபதி விஜய் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தால் தனக்கு வயிறு எரிகிறது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தல தளபதி
தல தளபதி

By

Published : Aug 13, 2021, 6:52 AM IST

இயக்குநர் நெல்சன் இயக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகேயுள்ள செட்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றது.

அப்போது தல தோனியை, விஜய் நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் உரையாடிக் கொண்டபோது எடுத்த புகைப்படங்களை நேற்று (ஆக.12) நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்து ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர்.

அதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனும் விஜய்-தோனி இடையே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைக் கண்ட விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு வார்த்தை சொல்லி இருந்திருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸ்க்கு சென்றுவிட்டது.

சரி.. அந்த புகைப்படத்தையாவது அனுப்புங்க. நான் தல, தளபதியுடன் இருப்பது போன்று போட்டோ ஷாப் செய்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:படப்பிடிப்பில் தல தளபதி திடீர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details