'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' படத்தை இயக்கினார். இப்படத்தில் பணியாற்றிய போதுதான் இருவருக்கும் காதல் தீப்பொறி பற்றிக்கொண்டது.
இருவரும் காதலர்களாக பொது நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் ஒரே வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி அன்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நயன்தாரா சிறப்பாகக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு விக்னேஷ் சிவனை வாழ்த்தினர். பிறந்த நாளில் நயன்தாரா கொடுத்த இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
அதில், "நீ என் பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே. இனிமையான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நன்றி என் தங்கமே.
விக்னேஷ் சிவன் பிறந்தநாள் ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்தநாள் என்னுடன் இருந்த அனைத்து அன்பு நிறைந்த நண்பர்களுக்கும் நன்றி. எனது வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நாளாய் மாற்றினீர்கள். உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிகரமாகவும் இனிமையாகவும் இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதில் தன்னுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தhd பதிவு நயன்தாராவை குதூகலப்படுத்தியுள்ளது.