நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான Rowdy Pictures சார்பில் அறிமுக இயக்குனர் PS வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கூழாங்கல்.
இந்தத் திரைப்படம் இந்தியாவிலிருந்து 2022ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.
இதனையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரின் வாழ்த்திற்கும் ஆதரவிற்கும் நன்றி என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்