சர்வதேச அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் அம்மாக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்தனர். சிறு வயதில் எடுத்த புகைப்படம் தொடங்கி லேட்டஸ்ட் புகைப்படங்கள் வரை ஷேர் செய்தனர்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா கையில் ஒரு குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.