'துப்பாக்கி', 'அஞ்சான்' போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் வித்யூத் ஜம்வால், பாலிவுட்டிலும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். ஊரடங்கு நேரத்தில் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான வீடியோக்கலை பகிர்ந்து வந்த வித்யூத் ஜம்வால் தற்போது தனது யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்க உள்ளார்.
தண்ணீரில் நடக்கும் வித்தையை என் யூடியூப் சேனலில் பாருங்க - யூடியூப் சேனல் தொடங்கும் வித்யூத் ஜம்வால்
தண்ணீரில் நடக்க பயிற்சி செய்து வந்த நடிகர் வித்யூத் ஜம்வால் அந்த சாகசத்தை முதல் முதலாக தனது யூடியூப் சேனலில் செய்து காட்டவுள்ளார்.
Vidyut Jammwal to launch YouTube channel
இதுகுறித்து கூறுகையில், 'சொந்தமாக யூ-டியூப் சேனல் தொடங்குவது எனது பல நாள் கனவாக இருந்தது. அதற்கேற்ற சரியான கன்டென்டுக்காக காத்திருந்தேன். தற்போது புதிய சேனலை தொடங்கியுள்ளேன். தண்ணீரில் நடக்க சில காலமாக பயிற்சி எடுத்துவந்தேன். அதை செய்யப்போகிறேன், நம்ப முடியவில்லையா? என் யூடியூப் சேனலை பாருங்கள்' என்றார்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், உணவு தொடர்புடைய பல வீடியோக்கள் வித்யூத் ஜம்வாலின் யூ-டியூப் சேனலில் அப்லோடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.