தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மத்தியப்பிரதேச காட்டில் தொடங்கும் வித்யா பாலன் திரைப்பட படப்பிடிப்பு! - வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் நடிக்கும் 'ஷெர்னி' படத்தின் படப்பிடிப்பு மத்தியப் பிரதேசத்திலுள்ள காட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன்
வித்யா பாலன்

By

Published : Aug 23, 2020, 10:51 PM IST

நடிகை வித்யா பாலன் நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'சகுந்தலா தேவி'. சின்னத்திரை தொடர் மூலம் இவர் நடிகையானார்.

இதைத்தொடர்ந்து இவர் தற்போது 'ஷெர்னி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அமித் மசூர்கர் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 'ஷெர்னி' படத்தின் படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு காட்டில் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய வித்யா பாலன், "படப்பிடிப்பு நடத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் காட்டில் படப்பிடிப்பு நடத்தப் போகிறோம். ஒரு மூடப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு இல்லை என்பது ஒரு நல்ல விஷயம். நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details