தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிக்கித் தவித்த கியாரா... உதவிய ஆமிர்! - சிக்கித் தவித்த கியாரா

முகக்கவசத்தை கழட்ட முடியாமல் திணறிய கியாரா அத்வானிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

By

Published : Aug 14, 2021, 2:29 PM IST

லஸ்ட் ஸ்டோரிஸ், கபீர் சிங் உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷனாகத் திகழ்ந்து வருபவர் கியாரா அத்வானி.

முன்னதாக கியாரா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானுடன் ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். தொடர்ந்து இருவரும் மேடை ஏறியபோது தனது முகக்கவசத்தை கழட்ட முடியாமல் கியாரா சிரமப்பட்டார்.

கியாராவின் முகக்கவசம் அவரது காதணியில் சிக்கிக் கொண்டது. இதைக் கண்ட மேடையிலிருந்த ஆமிர் கான் அவருக்கு அன்போடு முகக் கவசத்தை கழட்ட உதவினார். ஆமிர் கானின் க்யூட்டான இந்த செயல் இணையத்தை தற்போது கலக்கி வருகிறது.

இதையும் படிங்க:சிம்பு ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details