விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருப்பதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஸ்ரீயோகா திரையரங்கில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
’பிகில்’ வெற்றியை மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள் - விஜய்
ஆம்பூரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
Victory of 'Bigil" - vijay fan's give saplings
விஜய் ரசிகர் மன்றம் மாதனூர் ஒன்றியத் தலைவர் கோவிந்தன் தலைமையில் ரசிகர்கள், படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். ‘பிகில்’ திரைப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.