மும்பை (மகாராஷ்டிரா): கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷலின் திருமணத்தில் சல்மான் கான் கலந்துகொள்வது குறித்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து வருகிறது. இந்நிநிலையில் சல்மான் கானின் குடும்பத்தினர் திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானின் சகோதரிகளான அர்பிதா மற்றும் அல்விரா ஆகியோருடன் கத்ரீனா இன்றும் நெருக்கமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமானோர் கூறும் தகவலின்படி, சல்மான்கானின் சகோதரி அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மா மற்றும் அல்விராவின் கணவர் அதுல் அக்னிஹோத்ரியும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.