வெற்றிமாறன் எழுத்தில் உருவாக இருக்கும் ‘அதிகாரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், செக்ன்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள படம் ‘அதிகாரம்’. இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரவன் உடன் வெற்றிமாறன் இணைந்து இதை தயாரிக்கிறார்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் ரத்தக் கறை படிந்த கத்தியுடன் லாரன்ஸ் நடந்து வருவது போல் இருந்தது. அவர் உடை, கத்தியை பார்க்கும்போது கறிக்கடையில் பணியாற்றுபவர் போல் இருக்கிறார். அது ஒரு வெளிநாடு என்பது தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள செகன்ட் லுக் அதை உறுதிபடுத்தியுள்ளது.